மாவட்ட செய்திகள்

சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Road workers' union demonstration

சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்,

சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார். வட்டச்செயலாளர் முருகையா, ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பாலுச்சாமி, மாவட்ட செயலாளர் வேல்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொரோனா தொற்று தடுப்பு உபகரணங்களை சாலைப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டும், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாவட்ட நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பணியை தனியாருக்கு ஒப்படைக்க போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு அரசு உத்தரவின்படி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. வட்ட துணை தலைவர் குருநாதன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்காசி, அம்பையில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி, அம்பையில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. சுற்றுலா வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அனைத்து சங்க நல கூட்டமைப்பினர் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. வேலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம், தேசிய தொலை தொடர்பு சம்மேளம், எஸ்.என்.இ.ஏ., ஏ.ஐ.பி.எஸ்.என்.எல்.இ.ஏ. ஆகிய சங்கங்கள் சார்பில் வேலூர் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்து மக்கள் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
5. டாக்டர், நர்சு பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர், நர்சு பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.