புதிதாக 122 பேருக்கு தொற்று; மேலும் ஒருவர் பலி சாவு எண்ணிக்கை 48 ஆக உயர்வு
புதுவையில் நேற்று புதிதாக 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது. மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியானதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது.
புதுச்சேரி,
மாநிலம் முழுவதும் நேற்று 735 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட் டது. இதில் புதுச்சேரியில் 114 பேர், காரைக்காலில் 8 பேர் என மொத்தம் 122 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களில் 85 பேர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 24 பேர் ஜிப்மரிலும், 5 பேர் கொரோனா கேர் சென்டரிலும், 8 பேர் காரைக் காலிலும் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 3,293 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 472 பேர், ஜிப்மரில் 351 பேர், கொரோனா கேர் சென்டரில் 219 பேர், காரைக் காலில் 44 பேர், ஏனாமில் 47 பேர், மாகியில் ஒருவர், பிற பகுதியில் ஒருவர் என 1,292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், புதுச்சேரியில் 146 பேர், ஏனாமில் 11 பேர் என 157 பேர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.
ஒருவர் பலி
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27 பேர், ஜிப்மரில் 6 பேர், கோவிட் கேர் சென்டரில் 51 பேர் என மொத்தம் 84 பேர் நேற்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் எண்ணிக்கை 1,953 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 37,999 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 33,991 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. 456 பேரின் பரிசோதனை முடிவு கள் காத்திருப்பில் உள்ளன.
புதுச்சேரி அண்ணா சாலையை சேர்ந்த 51 வயது ஆண் நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் புதுவையில் கொரோனாவால் பலியான வர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story