மாவட்ட செய்திகள்

பெருங்குடியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்தாக விற்ற 2 பேர் கைது + "||" + Painkillers in the colony 2 arrested for selling drugs

பெருங்குடியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்தாக விற்ற 2 பேர் கைது

பெருங்குடியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்தாக விற்ற 2 பேர் கைது
பெருங்குடியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்ததாக விற்ற மருந்து கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெருங்குடி பறக்கும் ரெயில் நிலையம் அருகே இளைஞர்களுக்கு போதை மருந்தை விற்றதாக பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்த தமிழரசன்(வயது 29) என்பவரை பெருங்குடி போலீசார் கைது செய்தனர். இவர் தனது நண்பர் மூலமாக வலி நிவாரணி மாத்திரைகளை ஆந்திராவில் இருந்து ஒட்டுமொத்தமாக வாங்கி வந்து வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாத்திரையை ரூ. 400 முதல் ரூ.500 வரை விற்று வந்தது தெரிந்தது.


இதையடுத்து தமிழரசனின் நண்பரான வேளச்சேரியை சேர்ந்த சாதிக் பாட்ஷா(30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். சாதிக் பாட்ஷா, வேளச்சேரி அன்னை இந்திரா நகரில் மருந்து கடை நடத்தி வருகிறார். அவரது வீட்டில் இருந்து சுமார் 2400 வலி நிவாரணி மாத்திரைகள், இருமல் டானிக் 100 பாட்டில்கள் மற்றும் ஊசி போடும் சிரஞ்சி, ரூ.5 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

கொள்ளை லாபம்

சாதிக் பாட்ஷாவிடம் நடத்திய விசாரணையில், கடந்த மாதம் ஊரடங்கின் போதே ஆந்திரா சென்று அங்கிருந்து வலி நிவாரணி மாத்திரைகளை கள்ளச்சந்தையில் வாங்கி வந்து உள்ளார். பின்னர் போதைக் காக இளைஞர்களுக்கு மாத்திரைகளை விற்பனை செய்து வந்தார். அதில் நல்ல லாபம் கிடைத்ததால் தமிழரசனிடம் கொடுத்து விற்று வந்துள்ளார்.

வலி நிவாரணி மாத்திரையை பொடி செய்து அதை திரவ கரைசலாக மாற்றி சிரஞ்சி மூலம் உடலில் செலுத்தினால் 3 முதல் 4 மணி நேரம் போதை உடலில் இருக்கும். அதே போல் இருமல் டானிக் இரண்டு பாட்டில்கள் குடித்தால் ஒரு நாள் முழுவதும் முழு போதை இருப்பதால் ஊரடங்கு காலத்தில் இந்த விற்பனையில் ஈடுபட்டதில் கொள்ளை லாபம் பார்த்துள்ளனர்.

சாதிக் பாட்ஷா மீது ஏற்கனவே சட்டவிரோதமாக மாத்திரை விற்பனை செய்தது தொடர்பாக போதை தடுப்பு பிரிவு போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து கைவரிசை: கொள்ளையனின் காதலி, கூட்டாளி கைது
பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த கொள்ளையனின் காதலி, கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.
2. தாயை அடித்து கொன்ற 2 மகன்கள் கைது
ஈரோட்டில் தாயை அடித்து கொன்ற 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.
3. கோவில்பட்டியில் பெயிண்டர் கொலையில் 3 பேர் கைது
கோவில்பட்டியில் பெயிண்டர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கேரளாவில் 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன
கேரளாவில் 75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
5. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது
திருவொற்றியூர் கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன் என தெரிந்தது. சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் அவரை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.