தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி செவிலியர் தர்ணா


தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி செவிலியர் தர்ணா
x
தினத்தந்தி 31 July 2020 6:26 AM IST (Updated: 31 July 2020 6:26 AM IST)
t-max-icont-min-icon

வேப்பங்குப்பம் போலீஸ்நிலையம் முன்பு தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி செவிலியர் தர்ணா.

அணைக்கட்டு,

அணைக்கட்டு தாலுகா அகரம் கிராமத்தைச்சேர்ந்தவர் சுதாகர் (வயது 38). மேற்குமாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவி (33). சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 15 ஆண்டுகளாக சுதாகர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சுதாகருக்கு வேறு இடத்தில் பெண்பார்த்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தேவி, சுதாகர் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அதற்கு சுதாகர் உன்னை நான் காதலிக்கவில்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த தேவி தன்னை காதலித்து ஏமாற்றிய சுதாகரை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி வேப்பங்குப்பம் போலீஸ் நிலையம் முன் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை தேடிவருகின்றனர்.

Next Story