தேன்கனிக்கோட்டை அருகே தக்காளி தோட்டத்தை நாசப்படுத்திய காட்டு யானைகள்


தேன்கனிக்கோட்டை அருகே   தக்காளி தோட்டத்தை நாசப்படுத்திய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 31 July 2020 10:29 AM IST (Updated: 31 July 2020 10:29 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே தக்காளி தோட்டத்தை காட்டு யானைகள் நாசப்படுத்தின.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரக்கட்டா கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் ரூ.1½ லட்சம் செலவில் தக்காளி பயிரிட்டிருந்தார். இவரது தோட்டத்தில் தக்காளி நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் அருகில் உள்ள நொகனூர் வனப்பகுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு வந்த 3 காட்டுயானைகள் பாலாஜியின் தக்காளி தோட்டத்திற்குள் புகுந்து அறுவடைக்கு தயாரான தக்காளிகளை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.

வனத்துறையினர் பார்வையிட்டனர்

நேற்று காலையில் தோட்டத்திற்கு வந்த பாலாஜி, சேதமான தக்காளி பயிர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து தேன்கனிகோட் டை வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் பாலாஜியின் தோட்டத்திற்கு சென்று சேதமான பயிர்களை பார்வையிட்டனர். மேலும் அவருக்கு வனத்துறையினர் ஆறுதல்கூறினர்.
1 More update

Next Story