வேலூர் பழைய பஸ்நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம்


வேலூர் பழைய பஸ்நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 31 July 2020 10:14 PM IST (Updated: 31 July 2020 10:14 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சி சார்பில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி சார்பில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. முகாமில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், நர்சுகள் பங்கேற்று கொரோனா பரிசோதனை செய்தனர். இதில், 100-க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றனர். அதில், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி காணப்பட்ட 55 பேரின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த முகாமை 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையிட்டனர்.

Next Story