தொற்று தடுப்புக்காக மூடப்பட்ட சட்டசபை மீண்டும் திறப்பு
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட சட்டசபை அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கின.
புதுச்சேரி,
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடந்தது. இந்த கூட்டத்தொடரின் போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான என்.எஸ்.ஜே. ஜெயபாலனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து 26-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த சட்டசபை கூட்டத்தொடர் முன்கூட்டியே அதாவது 25-ந் தேதியே நிறைவு செய்யப்பட்டது. அன்றைய தினம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மைய மண்டபம் மூடப்பட்டது. இறுதி நாள் கூட்டம் சட்டசபை வளாகத்தில் திறந்தவெளியில் சாமியானா பந்தல் போட்டு நடத்தப்பட்டது.
தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு 25-ந் தேதி பிற்பகல் முதல் சட்டசபை வளாகம் முழுவதும் மூடப்பட்டது. எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள், சட்டசபை ஊழியர்கள், சபை காவலர்கள் ஆகியோருக்கு கடந்த 27-ந் தேதி கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சட்டசபை காவலர்கள் 2 பேர் உள்பட சட்டசபை ஊழியர்கள் அவரது குடும்பத்தினர் என 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டசபை வளாக பகுதிகள் மீண்டும் மூடப்பட்டன. முதல்-அமைச்சர், அமைச்சர்களின் அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
இந்தநிலையில் சட்டசபை வளாகம் திறக்கப்பட்டு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் நேற்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின. முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களுக்கு வந்து வழக்கம்போல் பணிகளை மேற்கொண்டனர். முன்னதாக அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது

Related Tags :
Next Story