தீக்குளித்து தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்


தீக்குளித்து தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Aug 2020 4:44 PM GMT (Updated: 4 Aug 2020 4:44 PM GMT)

தீக்குளித்து தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு.

வேலூர்,

வேலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட துத்திப்பட்டை சேர்ந்த பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடக்க இருந்தது. அதற்காக அங்கு 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமானவர்கள் திரண்டதால் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு, முன்னாள் எம்.எல்.ஏ. லதா மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்ற வேண்டும், தற்கொலைக்கு காரணமானவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

Next Story