ஓட்டப்பிடாரத்தில் ரூ.20 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகள் சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ஓட்டப்பிடாரத்தில் ரூ.20 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகள் சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Aug 2020 6:41 PM GMT (Updated: 4 Aug 2020 6:41 PM GMT)

ஓட்டப்பிடாரத்தில் ரூ.20 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகள் சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலஅரசடி பஞ்சாயத்து குமரபுரம் கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 செலவில் கலையரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவரும் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலருமான இளையராஜா, மேலஅரசடி பஞ்சாயத்து தலைவர் ரோகிணி கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து குலசேகரநல்லூர் கிராமத்தில் கனிமொழி எம்.பி ஏற்பாட்டில் ரூ.13 லட்சம் செலவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி நடந்தது. இந்த பணியை எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் கூடுதல் ஆணையாளர் வளர்மதி, குலசேகரநல்லூர் பஞ்சாயத்து தலைவர் வேலாயுதசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் சுகுமார், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மேலஅரசரடி, ஆரைக்குளம் ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளில் ஈடுபட்டு உள்ள பொதுமக்களிடம் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ குறைகளை கேட்டு அறிந்தார். உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story