நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சிபாரிசு


நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சிபாரிசு
x
தினத்தந்தி 5 Aug 2020 12:31 AM IST (Updated: 5 Aug 2020 12:31 AM IST)
t-max-icont-min-icon

இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் சிபாரிசு செய்துள்ளார்.

பாட்னா,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது.

நடிகர் சு ஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், விசாரணை திருப்திகரமாக இல்லை என்று, சு ஷாந்தின் தந்தை, பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ராஜீவ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

தனிமைப்படுத்தினர்

அதன்பேரில், ராஜீவ்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சு ஷாந்த் தற்கொலை குறித்து விசாரிக்க பினய் திவாரி என்ற ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் போலீஸ் படை மும்பைக்கு சென்றது.

ஆனால், மும்பை போலீசார் ஒத்துழைப்பு அளிக்காததுடன், பினய் திவாரியை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தினர். இச்சம்பவம், பீகாரில் கடும் எதிர்ப்பை தோற்றுவித்தது.

சி.பி.ஐ. விசாரணை

இந்நிலையில், பீகார் மாநில முதல்-மந்திரி நிதி ஷ்குமார், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகர் சு ஷாந்த் குடும்ப உறுப்பினர்கள், பீகார் மாநில போலீஸ் டி.ஜி.பி. குப்தே ஷ்வர் பாண்டேவை தொடர்பு கொண்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு முறையான சிபாரிசை மத்திய அரசுக்கு உடனே அனுப்பி வைக்குமாறு நான் மாநில போலீசுக்கு உத்தரவிட்டுள்ளேன். நடிகர் சு ஷாந்த் நல்ல நடிகர். அவருடைய குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்.

மும்பைக்கு விசாரணைக்கு சென்ற பாட்னா போலீசாரிடம் மும்பை போலீசார் நடந்து கொண்ட விதம் சரியல்ல. மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர்.

இவ்வாறு நிதி ஷ்குமார் கூறினார்.

Next Story