கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு படுக்கைகளை அதிகரிக்க அதிகாரிகளுடன், நாராயணசாமி ஆலோசனை
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகளை அதிகரிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு கதிர் காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500 நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் தற்போது 259 பேரும், ஜிப்மரில் 381 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுவை மாநிலத்தில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி சட்டசபை வளாகத்தில் நேற்று மாலை முதல்-அமைச்சர் நாராயணசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துறையின் செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கைகளை அதிகப்படுத்துவது, தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கைகள் பெறுவது, சிகிச்சை முறையில் மாற்றங்கள் கொண்டு வரலாமா? மேலும் தடுப்பு முறைகள், வருங்காலத்தில் நோயாளிகள் அதிகமானால் சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் பரிசோதனை கருவிகள் வாங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இலவச அரிசி
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது தொடர்பாகவும் குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். இதில் இனிவரும் காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு தடையில்லாமல் இலவச அரிசி வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறிவிக்கப்பட்ட பொதுமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், மாவட்ட கலெக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் மற்றும் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story