கருணாநிதி நினைவுநாள்: ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்


கருணாநிதி நினைவுநாள்: ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Aug 2020 2:11 AM GMT (Updated: 5 Aug 2020 2:11 AM GMT)

கருணாநிதி நினைவுநாள்: ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஆன்லைன் மூலம் நேற்று மாலையில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் வருகிற 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கருணாநிதி 2-ம் ஆண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகரம், நகரம், ஒன்றியம், பேரூர், பகுதி, ஊர்க்கிளைகள் மற்றும் வார்டு தோறும் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்த வேண்டும். அஞ்சலி செலுத்தும் இடத்தில் கொரோனா போராளிகள் என்று அழைக்கப்படும் டக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை ஊழியர்கள், போலீசார், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களையும் இனங்கண்டு சிறப்பு செய்து பேரிடர் கால நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மாநில அரசு “புதியகல்விக் கொள்கை 2020” முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள நோயாளிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்றனர்.


Next Story