காயல்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காயல்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2020 12:07 AM IST (Updated: 6 Aug 2020 12:07 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆறுமுகநேரி,

காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் அஜ்ஹர் தலைமை தாங்கினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை கைவிட வேண்டும். காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சம்சுதீன், மாவட்ட பொதுச்செயலாளர் உஸ்மான், மாவட்ட செயலாளர் அப்துல் அஜிஸ், நகர செயலாளர் அப்துர் ரஹ்மான், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல் காதர், மாவட்ட செயலாளர் சம்சு மரைக்கார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story