தவளக்குப்பத்தில் ரூ.1¼ கோடியில் உள்விளையாட்டு அரங்க கட்டுமானப்பணி நாராயணசாமி தொடங்கி வைத்தார்


தவளக்குப்பத்தில் ரூ.1¼ கோடியில் உள்விளையாட்டு அரங்க கட்டுமானப்பணி நாராயணசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Aug 2020 1:38 AM IST (Updated: 6 Aug 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

தவளக்குப்பத்தில் ரூ.1¼ கோடி செலவில் உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

பாகூர்,

இந்திய விமான நிலைய ஆணையத்தின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் புதுவையில் 12 இடங்களில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக தவளக்குப்பம், பாகூர், காரைக்கால், ஏனாம் ஆகிய 4 இடங்களில் இந்த பணிகள் தொடங்க உள்ளன.

தவளக்குப்பத்துக்கான உள்விளையாட்டு அரங்கை, அப்பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கவேண்டும் என்று தொகுதி எம்.எல்.ஏ.வான அரசு கொறடா அனந்தராமன் அரசை வலியுறுத்தினார். அதன் பேரில் அங்கு ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் உள்விளையாட்டு அரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அடிக்கல்

அதன்படி உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற் கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு அடிக் கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோபாலகிருஷ்ணன், அரசு கொறடா அனந்தராமன், வளர்ச்சி ஆணையர் அன்பரசன், விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்தியா, கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு, வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு, துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஐ.என்.டி.சி. நிர்வாகி முத்துராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

14 ஆயிரம் சதுர அடியில் இந்த உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. இதில் கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, பேட்மிண்டன் ஆகிய விளையாட்டு தளங்கள் இடம்பெறுகின்றன.

Next Story