3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்


3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2020 3:35 AM IST (Updated: 6 Aug 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்கர் பிரபு, மாநில பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை ரூ.50 லட்சத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியின்போது நோய்த்தொற்றுக்குள்ளாகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஊழியர்களுக்கு உயர் தரமான சிகிச்சை மற்றும் கருணைத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் கோஷமிட்டனர்.

Next Story