வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்


வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2020 2:20 AM GMT (Updated: 6 Aug 2020 2:20 AM GMT)

வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது.

வேலூர்,

வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அண்ணாசாலையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்கதலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் சசிகுமார், கவுரவதலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில், மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’ என்று உருவாக்க வேண்டும், மாநிலம் முழுவதும் உள்ள 128 நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைக்க வேண்டும், 5 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு ஊழியர்களை விரைந்து நியமிக்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளை தனியார் மயப்படுத்தும் மத்திய அரசின் அவசர சட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். வங்கி வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சங்க துணைத்தலைவர் செல்லப்பா, துணை செயலாளர் அருளானந்தம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story