கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி மராட்டிய அரசு அறிவிப்பு


கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி மராட்டிய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2020 1:36 AM IST (Updated: 7 Aug 2020 1:36 AM IST)
t-max-icont-min-icon

கூகுள் நிறுவனத்துடன் சேர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி அளிக்க உள்ளதாக மராட்டிய அரசு அறிவித்து உள்ளது.

மும்பை,

கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்றுகொடுத்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகளும் ஆன்லைன் கல்வி தொடர்பாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் கூகுள் நிறுவனத்துடன் சேர்ந்து மராட்டிய அரசு மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி சேவை அளிக்க உள்ளது. இந்த சேவை மூலம் மாநிலத்தில் 2.3 கோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். கூகுள் ‘ஜி-சூட்', ‘கூகுள் கிளாஸ் ரூம்', ‘கூகுள் மீட்' ஆகிய கருவிகள் மூலம் கல்வி சேவை அளிக்க உள்ளது.

நாட்டிலேயே முதல் மாநிலம்

இது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘‘நாட்டிலேயே மராட்டியத்தில் தான் முதலில் கல்விக்கு ஜி சூட் மற்றும் கூகுள் கிளாஸ் ரூம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் அவர்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என கேட்டுகொள்கிறேன். நாங்கள் “நாளை என்பதைவிட இன்றே செய்து முடிப்பது சிறந்தது'' என்ற பழமொழியை அடிக்கடி சொல்லுவோம். இந்த கொரோனா பிரச்சினை நம்மை நிகழ் காலத்தில் இருந்து எதிர்காலத்திற்கு கொண்டு சென்று இருப்பதாக உணர்கிறேன்’’ என்றாா்.

கூகுள் கல்வி சேவையை மராட்டியத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இலவசமாக பெற்று கொள்ள முடியும் என கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறினார்.

Next Story