திருக்கழுக்குன்றத்தில் கடன் தொல்லையால் டிரைவர் தற்கொலை


திருக்கழுக்குன்றத்தில் கடன் தொல்லையால் டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Aug 2020 6:36 AM IST (Updated: 7 Aug 2020 6:36 AM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றத்தில் ஊரடங்கால் கடன் தொல்லையால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றம் வடக்கு தெரு ருத்திரான் கோவில் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், ஸ்ரீசக்தி (7) என்ற மகனும், தாட்சாயிணி என்ற 9 மாத மகளும் உள்ளனர்.

வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் வாங்கி வேன் வாங்கி ஓட்டி வந்தார். வாங்கிய கடனை தவணை முறையில் செலுத்தி வந்தார்.

தற்கொலை

கொரோனா தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அவர் தவணைத்தொகையை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளானார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான அவர் நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு விசாரித்து வருகிறார்.

Next Story