மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு + "||" + Two school children drowned in a pond near Kanchipuram

காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு

காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு
காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி ரோட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சோமு. இவர், மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சுதன் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்தான்.


காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மகன் ஜெகத்பிரியன் (9). 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

குளத்தில் மூழ்கி பலி

நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று திருப்புட்குழி அருகே உள்ள தாமரைக்குளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ஜெகத்பிரியன், சுதன் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பாலுச்செட்டிசத்திரம் போலீசார், குளத்தில் மிதந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கல்லூரி பெண் விரிவுரையாளர் சாவு
பெரம்பலூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கல்லூரி பெண் விரிவுரையாளர் பரிதாபமாக இறந்தார்.
2. மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
3. தேவையூர் கிராமத்தில் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் சாவு
தேவையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் தவறி விழுந்து சிறுவன் இறந்தான்.
4. உத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு
உத்திரமேரூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
5. பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு
நெமிலி அருகே இளம்பெண்ணின் உடலை தோண்டிஎடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...