தடுப்பணை கட்ட மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே புதிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான பணிக்கு அப்பகுதியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பணை கட்டும் பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. கட்டுமான பணியில் அந்த தடுப்பணையை சுற்றி 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு கரையை பலப்படுத்த களிமண் கொண்டு நிரப்பும் பணியை பொதுப்பணித்துறையினர் நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.
இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் திருவள்ளூரை அடுத்த அகரம் ஏரியில் இருந்து மண் எடுத்து வந்துபணியை தொடங்கினர். இதையறிந்த பிஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தடுப்பு அணை கட்ட அகரம் ஏரியில் இருந்து மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தும், பிஞ்சிவாக்கம் சப்பர் ஏரியில் மணல் எடுக்க வலியுறுத்தியும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரிகள் சிறை பிடிப்பு
இதைத்தொடர்ந்து அகரம் ஏரியிலிருந்து மண் எடுத்து வந்த 5 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன், கடம்பத்தூர் சப்-இன்ஸ்பெக் டர் பாலகிருஷ்ணன், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.
அப்போது அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் எடுத்துக்கூறி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து, சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக நேற்று அகரம் ஏரியில் மண் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது.

Related Tags :
Next Story