நீலகிரியில் மழை பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் கேட்டறிந்தார்
நீலகிரியில் மழை பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் கேட்டறிந்தார் என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட குந்தா பாலம், கண்ணேரிமந்தனை, எமரால்டு, அண்ணாநகர் ஆகிய நிவாரண முகாம்களில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், முதன்மை செயலாளருமான சுப்ரியா சாகு மற்றும் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மேற்கண்ட முகாம்களை நேரில் பார்வையிட்டனர். அங்கு தங்க வைக்கப்பட்டு இருக்கும் மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, பின்னர் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
முதல்-அமைச்சர் உத்தரவின்படி, கண்காணிப்பு அதிகாரியும், கலெக்டரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
நீலகிரியில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற 9-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக 8-ந் தேதி (அதாவது நாளை) கனமழை பெய்யும். கனமழையுடன் கூடிய காற்று காரணமாக மரங்கள் விழுந்து வருகின்றன.
நேற்று(அதாவது நேற்று முன்தினம்) ஊட்டி-கூடலூர் சாலை உள்பட மொத்தம் 212 மரங்கள் விழுந்தது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கனமழை மற்றும் காற்றின் மூலம் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்து, அப்பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து ஆய்வு பணி நடந்து வருகிறது. மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 120 பேர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் பேர் நீலகிரிக்கு மீட்பு பணிக்காக வந்து உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் பொதுமக்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். அத்தியாவசிய தேவைகளை தவிர, வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அவலாஞ்சியில் கடந்த ஆண்டு பெய்த மழை அளவை விட நடப்பாண்டில் மழை அளவு குறைவாக பதிவாகி உள்ளது. இருப்பினும், சிறப்பு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின் கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளதால், அதை சீரமைக்கும் வகையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழக முதன்மை பொறியாளர் தலைமையில் 4 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி மற்றும் கூடலூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்து உள்ளதால், முன்னெச்சரிக்கையாக மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. போர்க்கால அடிப்படையில் மரங்களை அகற்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மின்சாரம் வினியோகிக்க வழிவகை செய்யப்படும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story