திருவண்ணாமலையில் பரபரப்பு: மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ரூ.3½ லட்சம் திருட்டு - போலீசார் விசாரணை
திருவண்ணாமலை தனியார் மோட்டார் சைக்ககிள் ஷோரூமில் ரூ.3½ லட்சம் திருடப்பட்டுள்ளது. இது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை போளூர் சாலையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் உள்ளது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை நகர பகுதியில் மருந்தகங்கள், ஓட்டல்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மாலை சுமார் 6 மணிக்கு மேல் மூடப்பட்டு விடுகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை சுமார் 6.30 மணியளவில் இந்த மோட்டார் சைக்கிள் ஷோரூமும் மூடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சுமார் 9 மணியளவில் மேலாளரான திருவண்ணாமலை தாமரை நகர் பகுதியை சேர்ந்த அருள் (வயது 38) மற்றும் ஊழியர்கள் ஷோரூமை திறந்து உள்ளே சென்று உள்ளனர். அப்போது அங்கு உள்ள ஏ.சி. கம்ரேசர் பக்கம் உள்ள ஜன்னல் கம்பியை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று மேலாளர் அறையின் கண்ணாடி கதவை உடைத்து அங்கிருந்த ரூ.3 லட்சம் 50 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து ஷோரூம் உள்ளே சென்று பார்வையிட்டு விச ாரணை நடத்தினர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் கைரேகைகள் சேகரி க்கப்பட்டு உள்ளது. மேலும் ஷோரூமில் உள்ள சி.சி.டி.வி. கேமிர ாவில் திருட்டில் ஈடுபட்டவர்களின் நடமாட்டம் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மேலாளர் அருள் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலையில் நேற்று பகலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story