திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பாதித்த பகுதிகளை சேர்ந்தவர்கள், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று பழனி தாலுகாவை சேர்ந்த 57 பேர் உள்பட மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதில் 37 பெண்கள், 9 சிறுவர்களும் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 3 ஆயிரத்து 465 ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று 117 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 824 ஆக அதிகரித்தது.
Related Tags :
Next Story