முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை


முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை
x
தினத்தந்தி 9 Aug 2020 10:42 PM GMT (Updated: 9 Aug 2020 10:42 PM GMT)

முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமியின் படத்தை வெளியிட்டு, கவர்னர் கிரண்பெடி அறிவுரை கூறியுள்ளார்.

புதுச்சேரி, 

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை சட்டமன்ற கமிட்டி அறையில் சட்டத் தொகுப்பு புத்தகத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி தனபால், சட்டத்துறை செயலாளர் ஜூலியட் புஷ்பா, வளர்ச்சி ஆணையர் அன்பரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி பத்திரிகை செய்தி மற்றும் படத்தை கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் முக்கிய பிரமுகர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும். நான் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். கொரோனா பரவுவதை தடுக்க சமூக இடைவெளி உள்பட முக்கிய விதிமுறைகளை கடைபிடியுங்கள். அதை மீறும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம். தங்களையும், மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும்.

நீங்கள் புதுவையை விரும்பினால் இதை செய்யுங்கள். இந்த புகைப்படம் சமூக இடைவெளியை கடைபிடிக்காததற்கு சான்று. புதுவையில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய காரணம். முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிறரின் இதுபோன்ற விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காலத்தின் தேவை

சமூகத்துக்கு முன்னோடியாக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் விதிகளை முதலில் கடைபிடிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகளே தினசரி இதுபோன்ற விதிமீறல் களில் ஈடுபடுவதால் டாக்டர் களும், சட்டத்தை அமலாக்கம் செய்வோரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மக்கள் செய்ய வேண்டியதை அரசியல் தலைமையே செய்யாவிட்டால், கொரோனாவுக்கு எதிரான யுத்தம் பின்னோக்கிதான் செல்லும். இதனால் மக்கள்தான் கஷ்டப்படுவார்கள்.

அரசு துறையில் ஏராளமானோர் கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொள்ள பயன்படுத்தப்படுகிறார்கள். கணிசமான நிதி ஆதாரமும் பரிசோதனை, சிகிச்சைக்கு செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு பொது பிரதிநிதியும் தங்கள் பகுதிகளுக்கு பொறுப்பேற்று தனிப்பட்ட ஒழுக் கத்தை கவனிக்கவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

பின்பற்ற வேண்டும்

விரைவில் விநாயகர் சதுர்த்தி விழா வரவுள்ளது, அரசியல் தலைமையில் உள்ளோர் தங்கள் பாணியை மாற்றிக்கொள்வதும் அவசியம். இல்லாவிட்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும். அரசியல் தலைமையானது மக்களை சரியான வழியை நோக்கி வழிநடத்த வேண்டும். தவறான வழியை பின்பற்ற செய்யக் கூடாது. உண்மையில் புதுவையை நேசித்தால், மக்கள் நலனில் அக்கறை இருந்தால் ஒவ்வொரு அரசியல் பிரதிநிதியும் சமூக இடைவெளி, முககவசம் அணிதல், கையை தூய்மை செய்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 


Next Story