மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை + "||" + Woman commits suicide by setting fire near Gummidipoondi

கும்மிடிப்பூண்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது செதில்பாக்கம் கிராமம். இங்கு வசித்து வந்தவர் ரோஜா (வயது 56). இவரது மகன் வெங்கடேசன் (35). இவருக்கும் இவரது உறவினர்களான குமார், மைக்கேல் உள்பட சிலருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 6-ந்தேதி வெங்கடேசனின் குடும்பத்தினர் தாக்கப்பட்டனர். அங்கிருந்த காரின் கண்ணாடியும் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் பாதிரிவேடு போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனின் உறவினர்கள் அவரது தாய் மற்றும் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் ரோஜா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் அவரது உறவினர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கடலூரில், மீனவர் விஷம் குடித்து தற்கொலை உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
2. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு
மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரன் இறந்த அதிர்ச்சியில் அவரது தாத்தாவும் மாரடைப்பால் உயிரிழந்தார்.
3. தொட்டியம் அருகே குடும்ப பிரச்சினையால் பட்டதாரி பெண் தற்கொலை முசிறி சப்-கலெக்டர் விசாரணை
தொட்டியம் அருகே குடும்ப பிரச்சினையில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் முசிறி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
4. கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை
கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. சேலத்தில் பரபரப்பு 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
சேலத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...