மறைமலைநகர் அருகே ஏரியில் மண் திருட்டு; லாரி பறிமுதல்
மறைமலைநகர் அருகே ஏரியில் மண் திருட்டுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள செங்குன்றம் ஏரியில் அடிக்கடி மண் திருடப்பட்டு லாரி மூலம் கடத்தப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு புகார் தெரிவித்து வந்தனர். நேற்று மதியம் செங்குன்றம் ஏரியில் மண் திருடப்படுவது குறித்து மறைமலைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் லாரி டிரைவர் உள்பட மண் திருடிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. போலீசார் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மண் திருடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story