அந்தேரி பகுதியில் மக்களை மிரட்டி வந்த சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது


அந்தேரி பகுதியில் மக்களை மிரட்டி வந்த சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 11 Aug 2020 3:45 AM IST (Updated: 11 Aug 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

அந்தேரி எம்.ஐ.டி.சி பகுதியில் மக்களை மிரட்டி வந்த சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது.

மும்பை,

மும்பை அந்தேரி கிழக்கு எம்.ஐ.டி.சி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தைப்புலி ஒன்று நடமாடி வந்தது. இது பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் இரவு நேரத்தில் வெளியே நடமாட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்கு வைத்த கூண்டில் சிறுத்தைப்புலி சிக்கியதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் வனத்துறையினர் அங்கு வந்து கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலியை மீட்டு வேனில் ஏற்றி சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு கொண்டு சென்றனர். இது பற்றி வனத்துறை அதிகாரி தெரிவிக்கையில், பிடிபட்டது ஆண் சிறுத்தைப்புலி எனவும், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காட்டில் விடப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story