சேரன்மாதேவியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கு; 4 பேர் கைது


சேரன்மாதேவியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கு; 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2020 7:08 AM IST (Updated: 12 Aug 2020 7:08 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கு; 4 பேர் கைது.

சேரன்மாதேவி, 

சேரன்மாதேவி கீழ நடுத்தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன். இவரது மகன் கார்த்திக் ராஜா (வயது 20). நேற்று முன்தினம் மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில் இவரின் காது துண்டாகி கீழே விழுந்தது. மேலும் இடுப்பு பகுதியிலும் வெட்டு விழுந்தது. மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. கார்த்திக் ராஜாவை உடனடியாக மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, பின் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து, சேரன்மாதேவியைச் சேர்ந்த அழகு கோனார் மகன் தங்கராஜ்(32), சேகர் மகன் சங்கர் என்ற விஜயசங்கர்(20), பாலசுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (24), மற்றும் அரிகேசவநல்லூரை சேர்ந்த அர்ச்சுனன் மகன் துரை (20) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story