மராட்டியத்தில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிப்பு மேலும் 3 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 3 போலீசார் உயிரிழந்தனர்.
மும்பை,
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் களப்பணியாற்றி வரும் போலீசார் தொடர்ந்து இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 294 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 392 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் 3 போலீசார் உயிரிழந்தனர். இதனால் பலியான போலீசாரின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்தது. இதில் 11 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட போலீசாரில் 9 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 2 ஆயிரத்து 84 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
89 போலீசார் காயம்
இதேபோல ஊரடங்கு காலகட்டத்தில் நடந்த 332 தாக்குதல் சம்பவங்களில் 89 போலீசார், 66 சுகாதாரத்துறை ஊழியர்கள் காயமடைந்தனர். இந்த வழக்குகளில் 888 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மாநில போலீசார் இதுவரையில் ஊரடங்கு அத்துமீறல் தொடர்பாக பொதுமக்களிடம் ரூ.20 கோடி வரை அபராதம் வசூலித்து உள்ளனர்.
Related Tags :
Next Story