வேலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2020 1:42 AM GMT (Updated: 13 Aug 2020 1:42 AM GMT)

வேலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம், தேசிய தொலை தொடர்பு சம்மேளம், எஸ்.என்.இ.ஏ., ஏ.ஐ.பி.எஸ்.என்.எல்.இ.ஏ. ஆகிய சங்கங்கள் சார்பில் வேலூர் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர், 

ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். மாவட்ட செயலாளர் தங்கவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அல்லிராஜா, ஷபியுல்லா, சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக ஓய்வூதியர் சங்க மாநில உதவி செயலாளர் ஞானசேகரன் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கும்கா பகுதியில் நடந்த கூட்டத்தில் ஆனந்தகுமார் ஹெக்டே எம்.பி. மத்திய அரசு பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஆனால் அவர்கள் சரியாக பணியாற்றாமல் அரசுக்கு துரோகம் செய்து வருகிறார்கள். எனவே அனைவரையும் வேலையில் இருந்து நீக்கவிட்டு, அந்த துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்று பேசி உள்ளார். இதனை கண்டித்தும், ஆனந்தகுமார் ஹெக்டே எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story