விருதுநகர் மாவட்டத்தில், ஒரே நாளில் 292 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 136 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 10,977 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 8,896 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதில் 8,795 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 5 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 410 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 1,200 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. விருதுநகர் நக்கீரர் தெருவை சேர்ந்த 65 வயது மூதாட்டி, சாஸ்திரிநகரை சேர்ந்த 42 வயது நபர், அல்லம்பட்டியை சேர்ந்த 31 வயது நபர், கருப்பசாமிநகரை சேர்ந்த 48 வயது நபர், சேக்கிழார்தெருவை சேர்ந்த 55 வயது பெண், சூலக்கரையை சேர்ந்த 23 வயது பெண், 37 வயது நபர், காந்திநகரை சேர்ந்த 32 வயது நபர், விருதுநகர் தனியார் நூற்புமில்லை சேர்ந்த 30, 26, 29, 61, 55 வயது நபர்கள், 30, 29 வயது பெண்கள், தனியார் எண்ணெய் ஆலையை சேர்ந்த 21 வயது நபர், சங்கரலிங்காநகரை சேர்ந்த 39 வயது பெண், ஆர்.ஆர்.நகரை சேர்ந்த 34 வயது நபர், 50 வயது பெண், பாண்டியன்நகரை சேர்ந்த 25, 36 வயது பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அருப்புக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 37 வயது போலீஸ்காரர், இனாம்ரெட்டியபட்டி, பந்தல்குடி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 37 வயது பெண், திருச்சுழி, கல்லூரணி, மேட்டமலை, திருத்தங்கல் உள்பட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 292 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 11,269 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவ பரிசோதனை 1 லட்சத்தை தாண்டி விட்ட நிலையிலும் பரிசோதனை முடிவுகள் தெரிவதில் மாவட்ட நிர்வாகத்தால் தாமதத்தை தவிர்க்க இயலவில்லை.
பரிசோதனை முடிவுகள் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகர மருத்துவ பரிசோதனை மையங்களில் இருந்து வர வேண்டிய நிலையில் முடிவுகள் தாமதம் ஆகிறது.
விருதுநகர் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த மருத்துவ பரிசோதனை முகாம்களில் பரிசோதனை செய்தவர்களுக்கு 12 நாட்கள் ஆகியும் முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலை நீடித்தது. இதனால் முடிவுகள் தெரியாத நிலையில் பலர் தனிமைப்படுத்தலை தவிர்க்கும் நிலையும் ஏற்பட்டது. இம்மாதிரியான குழப்பநிலை தவிர்க்கப்பட மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 3 பேர் பலியாகினர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story