மாவட்ட செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வீட்டிலேயே கரைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு + "||" + Collector orders Ganesha idols to be dismantled at home in corona controlled areas

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வீட்டிலேயே கரைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வீட்டிலேயே கரைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வீட்டிலேயே கரைக்க வேண்டும், சிலை கரைப்புக்காக மக்கள் வெளியே வரக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
தானே, 

மராட்டியத்தில் வருகிற 22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசு சில கட்டுப்பாடுகளுடன் மண்டல்களில் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி அளித்து உள்ளது.

இந்தநிலையில் தானே மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நார்வேக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தானே மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை தங்கள் வீட்டிலேயே கரைத்து கொள்ள வேண்டும். சிலை கரைப்புக்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கட்டுப்பாட்டு பகுதிகளில் சிலை கரைப்பு தினத்தில் மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது” என்றார்.

ஆன்லைன் மூலம் பதிவு

தானே மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா இதனை உறுதிப்படுத்தும் விதமாக அனைத்து வார்டு அலுவலகத்திற்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

இதில் மக்கள் தேவையின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும். விநாயகர் சிலைகளை கரைக்க விரும்புபவர்கள் மாநகராட்சி ஆன்லைனில் சிலையை கரைக்கும் இடம், நேரம் போன்றவை குறித்த விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 14-ந் தேதி (இன்று) முதல் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கல்யாண்- டோம்பிவிலி மாநகராட்சி கமிஷனர் விஜய் சூரியவன்சி தெரிவிக்கையில், “கொரோனா பரவல் காரணமாக மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வீடுகள் தோறும் விநாயகர் சிலைகளை பெற்று நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. சாலை அமைக்கப்பட்டு இருப்பதாக புகார்: சதுப்பு நிலப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
சாலை அமைக்கப்பட்டு இருப்பதாக புகார் கூறப்படும் சதுப்பு நிலப்பகுதியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2. மத்தூர் ஒன்றியத்தில் ரூ.96 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு
மத்தூர் ஒன்றியத்தில் ரூ.96 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
3. பாலியல் துன்புறுத்தல் குற்றவாளி போஸ்டர்களை சாலை சந்திப்புகளில் வைக்க யோகி ஆதித்யநாத் உத்தரவு
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றவாளிகளின் போஸ்டர்களை சாலை சந்திப்புகளில் வைக்கும்படி போலீசாருக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
4. வடகிழக்கு பருவமழை காலத்தில் மீட்பு உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை காலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் முதல் நிலை மீட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
5. கீழையூர் ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு
கீழையூர் ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...