குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 முககவசங்கள் கலெக்டர் தொடங்கி வைத்தார்


குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 முககவசங்கள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Aug 2020 6:56 AM IST (Updated: 14 Aug 2020 6:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பரவலை தடுக்க குடும்ப அட்டையில் உள்ள ஒருவருக்கு தலா 2 முககவசங்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

வேலூர், 

கொரோனா தொற்று பரவலை தடுக்க குடும்ப அட்டையில் உள்ள ஒருவருக்கு தலா 2 முககவசங்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி வேலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க திருப்பூரில் இருந்து 2 லட்சம் முககவசங்கள் வரவழைக்கப்பட்டன. பரிசோதனையில் 80 ஆயிரம் முகக்கவசங்கள் தரமற்றது என்று தெரிய வந்தது. அதையடுத்து அவை திருப்பூரில் உள்ள நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு முககவசங்கள் வழங்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி முகக்கவசம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story