மும்பையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது
மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது.
மும்பை,
மாநில தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 979 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 535 ஆகி உள்ளது. இதில் 1 லட்சத்து 1 ஆயிரத்து 860 பேர் குணமடைந்து விட்டனர். தற்போது 19 ஆயிரத்து 337 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்கள் சதவீதம் 79 ஆக உள்ளது.
இதேபோல நகரில் மேலும் 47 பேர் பலியாகி உள்ளனர். இதில் 33 பேர் ஆண்கள். 14 பேர் பெண்கள். இதுவரை 7 ஆயிரத்து 38 பேர் உயிரிழந்து உள்ளனர். மும்பையில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 84 நாட்களாக உள்ளது. தற்போது நகரில் 605 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 5 ஆயிரத்து 454 கட்டிங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
தானே, பால்கர் நிலவரம்
தானே மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 938 பேர் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 240 பேர் உயிரிழந்து உள்ளனர். தானே மாவட்டத்தை பொறுத்தவரை புறநகரில் 198 பேருக்கும், தானே மாநகராட்சியில் 223 பேருக்கும் (19 பேர் பலி), நவிமும்பையில் 393 பேருக்கும் (13 பேர் பலி), கல்யாண் டோம்பிவிலியில் 294 பேருக்கும், மிரா பயந்தரில் 88 பேருக்கும், உல்லாஸ்நகரில் 26 பேருக்கும், பிவண்டியில் 13 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பால்கர் மாவட்டத்தில் புறநகரில் 150 பேருக்கும், வசாய் விராரில் 196 பேருக்கும், ராய்காட் மாவட்டத்தில் 328 பேருக்கும், பன்வெல் மாநகராட்சியில் 137 பேருக்கும் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story