ஒரே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் கொரோனாவுக்கு பலி
மும்பை, ஒரே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் கொரோனாவுக்கு பலியானார்.
மும்பை,
மும்பை முல்லுண்டு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் விஸ்வனாத் தாம்பே(வயது54). இவர் போலீஸ்நிலைய நிர்வாக பொறுப்பை கவனித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று காலை உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் மரணம் குறித்து கூடுதல் கமிஷனர் லட்சுமி கவுதம் கூறுகையில், “தாம்பேவுக்கு வேறு சில நோய் பாதிப்புகளும் இருந்து உள்ளது. சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார்” என்றார்.
இதே போலீஸ் நிலையத்தில் விஸ்வனாத் தாம்பேயுடன் வேலை செய்த போலீஸ்காரர் ஸ்ரீகாந்த் துக்காராம் என்பவர் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு பலியானார். ஒரே போலீஸ் நிலையத்தில் அடுத்தடுத்து 2 போலீசார் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தேவ்னார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வந்தவர் விநாயக் பாபர்(வயது40). கொரோனா தொற்று காரணமாக நெரூலில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். உயிரிழந்த போலீஸ்காரர் விநாயக் பாபர் நவிமும்பை காமோட்டேவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவர்களது மரணம் மூலம் மும்பை போலீசில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்து உள்ளது. மும்பையில் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story