மயிலாடுதுறை உணவகத்தில் ஊத்தப்பம் கேட்டு தகராறு: தி.மு.க. ஊராட்சி மன்ற துணை தலைவர் மகன் உள்பட 2 பேர் கைது
மயிலாடுதுறை உணவகத்தில் ஊத்தப்பம் கேட்டு தகராறில் ஈடுபட்ட தி.மு.க. ஊராட்சி மன்ற துணை தலைவர் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குத்தாலம்,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஸ்டேட் வங்கி சாலையில் ஒரு தனியார் உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட வந்த இளைஞர்கள் சிலர் ஊத்தப்பம் கேட்டுள்ளனர். அதற்கு உணவக ஊழியர்கள், ஊத்தப்பம் இல்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் மதுபோதையில் இருந்த இளைஞர்கள், உணவக ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களை தாக்கி கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளனர்.
2 பேர் கைது
இந்த சம்பவங்கள் அனைத்தும் உணவகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. இதுகுறித்து உணவக ஊழியர் கதிரவன் என்பவர் சி.சி.டி.வி. பதிவுகளுடன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தீவிர விசாரணைக்கு பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை அருகே மாப்படுகை தி.மு.க. ஊராட்சி மன்ற துணை தலைவர் கருப்பையன் மகன் கவியரசன்(25), மாப்படுகை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் கார்த்தி(24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story