நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரணை


நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரணை
x
தினத்தந்தி 21 Aug 2020 7:52 AM IST (Updated: 21 Aug 2020 7:52 AM IST)
t-max-icont-min-icon

நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரணை.

மானாமதுரை,

மானாமதுரை ஜே.ஜே. காலனியில் வசித்து வருபவர் பிரதீபன். இவருடைய மனைவி சுகுமாரி (வயது 23). இவர் நேற்று மதியம் 12 மணியளவில் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் பூக்கார தெருவில் வரும் போது கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் சுகுமாரி கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அருகில் உள்ள வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 2 பேர் வேகமாக வந்து நகை பறித்துச் சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. மேலும் கேமரா இருப்பதை பார்க்கும் கொள்ளையர்கள் முகத்தை கீழே தொங்கவிட்டு செல்லும் காட்சியும் பதிவாகி உள்ளது.

அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story