கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டதில் பலியான அதிகாரிகளின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி


கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டதில் பலியான அதிகாரிகளின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி
x
தினத்தந்தி 22 Aug 2020 7:13 AM IST (Updated: 22 Aug 2020 7:13 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டபோது ஆவடி வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 12-ந்தேதி அன்று இறந்து போனார்.

திருவள்ளூர்,

கும்மிடிப்பூண்டி வட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் கடந்த மாதம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அரசு அதிகாரிகளான மேற்கண்ட 2 பேரின் குடும்பத்தாருக்கும் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையை நேற்று வழங்கி ஆறுதல் கூறினார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story