மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும் என்பது 20 ஆண்டு கால கோரிக்கை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை என மதுரையில் நடந்த தொழில் வர்த்தக சங்க கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை,
மதுரையை 2-வது தலைநகரமாக அறிவிக்கக்கோரி தென்மாவட்ட தொழில் வர்த்தகர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடந்தது. தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். முதுநிலை தலைவர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். இதில் தென்மாவட்டங்களை சேர்ந்த வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
மதுரையை 2-வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இது ஒரு புதிய கோரிக்கை அல்ல. 20 ஆண்டு காலங்களாக நிலுவையில் இருக்கக்கூடிய கோரிக்கைதான். தொழில் வர்த்தக சங்கத்தினர் ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருப்பார்கள். சென்னை ஒருதரப்பினருக்கு தலையாக உள்ளது. ஒருதரப்பினருக்கு நீண்ட தூரத்தில் உள்ளது.
பரபரப்புக்காக பேசவில்லை
மதுரை 2-வது தலைநகரம் என்ற விவாதத்தில் பலர் புரிதல் இல்லாமல் பேசுகின்றனர். சென்னையில் இடமில்லாமல் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என்று விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதற்கு காரணம் தலைநகரம் என்பதால்தான். மதுரை 2-ம் தலைநகர் ஆக வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் கோரிக்கை அல்ல. அது தென்மாவட்ட மக்களின் கோரிக்கை. இந்த கோரிக்கையை பரபரப்புக்காக பேசவில்லை.
அந்த தலைநகரம் மதுரையில்தான் அமைய வேண்டும் என்று இல்லை. மதுரை-திருச்சிக்கு நடுவில் கூட வரலாம். நிர்வாக வசதிக்காகத்தான் கேட்கிறோம். 50 சதவீத அரசு துறைகளின் தலைநகராக மதுரை மாறும் போது எத்தனை இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறுவார்கள் என்பதை உணர முடிகிறது.
மதுரைக்கு சிறப்பு அந்தஸ்து இருந்தால்தான் தொழில் முதலீட்டை தர முடியும், என்கிறார்கள். தூத்துக்குடி துறைமுகத்தை முழுமையாக பயன்படுத்தும் போது தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். எனது கோரிக்கை விவாத பொருளாக இருக்கலாம். ஆனால் நோக்கம் வளர்ச்சி பற்றியது, அதை தவிர உள்நோக்கம் இல்லை. மதுரைக்கு நிர்வாக அந்தஸ்து கிடைக்கும் போது அரசின் முடிவுகளை விரைவாக எடுக்க முடியும். அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி சட்டசபையில்தான் இதை அறிவிக்க முடியும் என்பது எனக்கு தெரியும்.
வளர்ச்சிதான் முக்கியம்
கொடுக்கிற சாமியாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். எனவே அவரிடம் கேட்டுள்ளோம். அவரிடமிருந்து மட்டுமே அறிவிப்பு வரும். பதவியை விட எனக்கு மதுரையின் வளர்ச்சிதான் முக்கியம். கோரிக்கையை வைத்து விட்டு பயந்து ஓட முடியாது. எதற்கும் நான் தயாராக இருக்கிறேன். சென்னையில் இடநெருக்கடியில் பணியாற்றாமல் மதுரையில் காற்றோட்டமாக பணியாற்றுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கோரிக்கை வைக்கிறார் என்றால் அது அவருக்கு வாக்களித்த மக்கள் சார்பாக வைக்கும் கோரிக்கை. அதற்கு அவருக்கு உரிமை உண்டு. இதை வைத்து மதுரைக்கும், திருச்சிக்கும் இடையே தேவையில்லாத பிரச்சினையை உருவாக்க வேண்டாம். என் மீது எத்தனை சாயங்கள், விமர்சனங்கள் வரும் என தெரிந்தேதான் கோரிக்கை விடுத்தேன். எனவே இதனை திசை திருப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story