வேலூர் மாநகராட்சி பகுதியில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு - அதிகாரிகள் தகவல்
வேலூர் மாநகராட்சி பகுதியில் விநாயகர் சிலைகளை கரைக்க 4 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களை மாநகராட்சி, வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வேலூர்,
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர், இளைஞர்கள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்வார்கள். 3 நாட்களுக்கு பின்னர் அந்தச் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், அவற்றை ஊர்வலமாகக் கொண்டு சென்று கரைப்பதற்கும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்கள் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் சென்று கரைக்கலாம் என்று தெரிவித்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை கரைக்க நீர்நிலைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் விநாயகர் சிலைகளை கரைக்க சதுப்பேரி ஏரி, தாராபடவேடு ஏரி, வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள கல்குவாரி குட்டை, விருதம்பட்டு பாலாறு ஆகிய 4 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகளை கரைக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை வேலூர் மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கண்ணன், வேலூர் தாசில்தார் ரமேஷ், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது ஏரிக்கு வரும் பாதையை பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்யவும், அந்தப் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கவும் மாநகராட்சி ஊழியர்களுக்கு, கமிஷனர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் பாதை சீரமைக்கும் பணிகள் நடந்தது.
ஆய்வின்போது வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர். அதைத்தொடர்ந்து மற்ற 3 இடங்களையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருவ மழையால் வீட்டு கிணற்றில் தண்ணீர் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள கிணற்றில் சிலைகளை கரைக்கலாம். அல்லது தண்ணீரில் சிலைகளை கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம். விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story