வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க சென்னை மண்டல செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் செல்வகுமார், தலைவர் பீமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகிறார்கள். அதற்காக மாவட்டம் தோறும் புதிதாக ஆம்புலன்சுகளை தமிழக அரசு வழங்கி உள்ளது. அதற்கு ஆட்கள் தேவைப்படும் நேரத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வரும் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தமிழக அரசு பி.எல். விடுப்புக்காக வழங்கிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவத்துறை சேவையை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தனியார் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரில் நடைபெற்ற ரேடியேட்டர் ஊழல் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியை கடைபிடித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story