கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ள இணையதளம் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ள இணையதளம் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Aug 2020 10:36 AM IST (Updated: 25 Aug 2020 10:36 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கொரோனா பரிசோதனை முடிவை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை கலெக்டர் ஷில்பா நேற்று தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதித்தர்கள் மருத்துவ பரிசோதனை அறிக்கையை எளிதாக பெறும் வகையில், நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மூலம் tvmcreport.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட்டார்.

இதில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டவரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை பதிவு செய்து, செல்போன் எண்ணுக்கு கிடைக்கும் ஒருமுறை கடவுச்சொல்லை பதிவு செய்தால், சம்பந்தப்பட்டவரின் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள், மருத்துவ அலுவலரின் ஒப்புதலுடன், பரிசோதனை மேற்கொண்ட 24 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரத்துக்குள் மருத்துவ அறிக்கை கிடைக்கும்.

பரிசோதனை அறிக்கை

நேற்று முன்தினம் முதல் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டவர்களின் மருத்துவ அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி அறிக்கையை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

Next Story