நெல்லையில் ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தூத்துக்குடி, தென்காசியில் 146 பேர் பாதிப்பு


நெல்லையில் ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தூத்துக்குடி, தென்காசியில் 146 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 26 Aug 2020 3:00 AM IST (Updated: 26 Aug 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நேற்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தூத்துக்குடி, தென்காசியில் 146 பேர் பாதிக்கப்பட்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் 77 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் பரவல் அதிகரித்து உள்ளது. ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் நெல்லை மாநகரத்தில் மட்டும் 69 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதவிர பாளையங்கோட்டை யூனியன் பகுதியில் 15 பேர், சேரன்மாதேவி பகுதியில் 13 பேர், நாங்குநேரி பகுதியில் 19 பேர் என கொரோனா தொற்று பரவி உள்ளது. இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,770-ஆக உயர்ந்துள்ளது. இதில் 7,319 பேர் குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 1,293 பேர் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 158 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 99 பேர் குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பினர்.

தென்காசி மாவட்டத்தில் 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,926 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,916 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

914 பேர் தென்காசி, நெல்லை அரசு மற்றும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனாவுக்கு இதுவரை 96 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 60 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 801-ஆக அதிகரித்து உள்ளது. அதேபோன்று 10 ஆயிரத்து 28 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 668 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 105 பேர் இறந்து உள்ளனர்.

Next Story