மகாட் கட்டிட விபத்து வேதனை அளிக்கிறது - பிரதமர் மோடி உருக்கம்


மகாட் கட்டிட விபத்து வேதனை அளிக்கிறது - பிரதமர் மோடி உருக்கம்
x
தினத்தந்தி 26 Aug 2020 4:30 AM IST (Updated: 26 Aug 2020 4:03 AM IST)
t-max-icont-min-icon

மகாட் கட்டிட விபத்து குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது.

மும்பை,

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் மகாட் பகுதியில் நடந்த குடியிருப்பு கட்டிட விபத்து வேதனையை அளித்து உள்ளது. கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்களை நினைத்து பார்க்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டி கொள்கிறேன். சம்பவ இடத்தில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் கட்டிட விபத்து குறித்து வேதனை தொிவித்து உள்ளனர்.

Next Story