நெல்லையில் கொலை வழக்கில் கைதானவர் வீட்டில் 3 துப்பாக்கி, ஆயுதங்கள் பறிமுதல்
நெல்லையில் கொலை வழக்கில் கைதானவர் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 3 துப்பாக்கிகள், ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்லை,
நெல்லை அருகே கரையிருப்பைச் சேர்ந்தவர் அசோக். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளராக இருந்தார். இவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் நெல்லை தச்சநல்லூர் சிதம்பரநகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 70) முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில் ராமச்சந்திரனின் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்து இருப்பதாக நேற்று முன்தினம் இரவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் உத்தரவின்பேரில், தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் போலீசார் சிதரம்பரநகரில் உள்ள ராமச்சந்திரன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ராமச்சந்திரன் வீட்டில் இல்லை. அவருடைய மனைவி, மருமகள் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு 3 ஏர்கன் துப்பாக்கிகள், 3 கத்திகள், 3 அரிவாள்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இந்திய படைக்கல சட்டத்தின்படி, ராமச்சந்திரன், அவருடைய மகன்கள் குமார், பூல்பாண்டி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story