நெல்லையில் குண்டர் சட்டத்தில் 5 பேர் சிறையில் அடைப்பு
நெல்லையில் குண்டர் சட்டத்தில் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை அருகே உள்ள தாழையூத்து தாதனூத்து தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலு மகன் விஜய் என்ற சுடலைகண்ணு (வயது 23), சாமிநாதன் மகன் ரகுநாத் (30). இவர்கள் மீது தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இவர்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், இன்ஸ்பெக்டர் சாம்சன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
இதை கலெக்டர் ஷில்பா ஏற்று சுடலைக்கண்ணு, ரகுநாத் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தாழையூத்து போலீசார், 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இதேபோல் தாழையூத்து சுடலை கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் சந்தனமாரிமுத்து (22). இவர் மீது நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
இதை கலெக்டர் ஷில்பா ஏற்று சந்தனமாரிமுத்துவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நெல்லை அனைத்து மகளிர் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயன் (38), நாலுமாவடி மறவர் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (30). இவர்கள் மீது மானூர் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்ளது.
இவர்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில் விஜயன், கந்தசாமி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மானூர் போலீசார் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story