மாமண்டூர் பாலம் அருகே லாரி தீப்பிடித்து சேதம்


மாமண்டூர் பாலம் அருகே லாரி தீப்பிடித்து சேதம்
x
தினத்தந்தி 28 Aug 2020 7:07 AM IST (Updated: 28 Aug 2020 7:07 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூர் பாலம் அருகே வந்தபோது திடீரென லாரி தீப்பற்றி எரிந்தது.

மதுராந்தகம்,

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த பொன்னுசாமி (வயது 38) டிப்பர் லாரியை ஓட்டி வந்தார். அந்த லாரி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூர் பாலம் அருகே வந்தபோது மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றும் முடியாததால் லாரி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story