கயத்தாறு பகுதியில் பலத்த மழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


கயத்தாறு பகுதியில் பலத்த மழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 30 Aug 2020 3:00 AM IST (Updated: 29 Aug 2020 11:19 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு பகுதியில் பெய்த பலத்த மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கயத்தாறு,

கயத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் கயத்தாறு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்தது. தொடர்ந்து இரவிலும் விடிய விடிய பலத்த மழை விட்டு விட்டு பெய்தது.

கயத்தாறு அருகே ஆசூர், வில்லிசேரி, தளவாய்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள விவசாய நிலங்களிலும் குளம் போன்று தண்ணீர் தேங்கியது. ஆசூரில் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், வருவாய் துறையினர் விரைந்து சென்று, பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, மழைநீரை வடிய வைத்தனர். விவசாய நிலங்களில் தேங்கிய தண்ணீரையும் வடிய வைக்க ஏற்பாடு செய்தனர்.

Next Story