மாவட்ட செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது + "||" + Nellai, Thoothukudi, Tenkasi Corona vulnerability Approximately 25 thousand

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது.
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவருக்கும், நெல்லையை சேர்ந்த மற்றொரு டாக்டர், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.


நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 53 பேருக்கும், பாளையங்கோட்டை மண்டல பகுதியை சேர்ந்த 14 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர மானூர், நாங்குநேரி, பாப்பாக்குடி, ராதாபுரம், சேரன்மாதேவி, களக்காடு ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 9,301-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 83 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினார்கள்.

தென்காசி மாவட்டத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆலங்குளத்தை சேர்ந்த 13 பேருக்கும், கீழப்பாவூரை சேர்ந்த 16 பேருக்கும், குருவிகுளத்தை சேர்ந்த 5 பேருக்கும், சங்கரன்கோவிலை சேர்ந்த 5 பேருக்கும், செங்கோட்டையை சேர்ந்த 8 பேருக்கும், தென்காசியை சேர்ந்த 26 பேருக்கும், வாசுதேவநல்லூரை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வீடுகளை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5,233-ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று திடீரென குறையத் தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 201 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 241 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 849 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாத்தான்குளத்தை சேர்ந்த சித்த மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு இறந்து உள்ளார். இதனால் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 112-ஆக அதிகரித்து உள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் சேர்ந்து கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காவல் ஆய்வாளர் மீது நெல்லை மாவட்டத்தில் கொலை வழக்கு பதிவு
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் - அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க கோரிக்கை
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு வலைவீச்சு
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. நெல்லை - தென்காசியில் அனைத்து கோவில்களிலும் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி நுழைவாயிலில் கிருமி நாசினி தெளிப்பு
நெல்லை, தென்காசியில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக கோவில் நுழைவாயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
5. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் குழந்தைகள் உள்பட 311 பேருக்கு கொரோனா மேலும் 2 பேர் சாவு
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் குழந்தைகள் உள்பட 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பேர் பலியானார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை