மாவட்ட செய்திகள்

விருத்தாசலம் அருகே கருப்பு கொடி ஏந்தி பொது மக்கள் போராட்டம் + "||" + Public protest carrying black flag near Vriddhachalam

விருத்தாசலம் அருகே கருப்பு கொடி ஏந்தி பொது மக்கள் போராட்டம்

விருத்தாசலம் அருகே கருப்பு கொடி ஏந்தி பொது மக்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் சுரங்க விரிவாக்க பணிக்காக, கடந்த 2014-15-ம் ஆண்டு, மந்தாரக்குப்பம், கெங்கைகொண்டான், ஆட்டோ கேட், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் வசித்த மக்களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றி, ஆலடி அடுத்த பாலக்கொல்லை பகுதியில் குடியமர்த்தினர். இதில் 62 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 212 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம், இங்கு வசிக்கும் 169 குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிப்பு கட்ட டோக்கன் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதில் முதல் கட்டமாக 150 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.


போராட்டம்

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி துணை செயலாளர் குரு, விருத்தாசலம் தொகுதி செயலாளர் அகிலன் மற்றும் நிர்வாகிகளுடன் பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கு அடுக்குமாடி குடியிப்பு வேண்டாம், தனித்தனியே வீடு கட்டித்தர வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த ஆலடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்‌ஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது புதுவை கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புதுவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல் பூஜை பொருட்கள் விற்பனையும் களைகட்டியது. பொருட்கள் வாங்க மார்க்கெட் வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
2. தூத்துக்குடியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்
தூத்துக்குடியில், வெங்காய விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வலியுறுத்தி நேற்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெங்காய மாலை அணிந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினர்.
3. கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை; டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம்
டெல்லியில் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. நைஜீரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் போலீசாரின் அத்துமீறல்களுக்கு எதிராக 2 வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
5. டிராக்டர் மோதி பலியான தொழிலாளி உடலை உரிமையாளர் வீட்டு முன் வைத்து உறவினர்கள் போராட்டம்
டிராக்டர் மோதி பலியான தொழிலாளியின் உடலை, டிராக்டர் உரிமையாளர் வீட்டு முன் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.